மந்திரவாதியை நம்பி மகளின் உயிரை பறிகொடுத்த பெற்றோர்

மந்திர சக்தியால் பெண்ணொருவரின் நோயைக் குணமாக்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காமையால் பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட அப்பெண், அங்கும் சிகிச்சை பயனளிக்கமையால் மரணமானார்.

இச்சம்பவம், கிராந்துருகோட்டைப் பகுதியின் பன்னலகம என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

மந்திரவாதியை நம்பி

பன்னலகமவைச் சேர்ந்த அனோஜா பிரியதர்சினி என்ற 24 வயது நிரம்பிய இளம் பெண்ணே மரணமானவராவார்.

இப்பெண் தீரா காய்ச்சல் நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மந்திர பலத்தில் பெரு நம்பிக்கை கொண்ட பெண்ணின் பெற்றோர் பிலியந்தல பகுதியின் மந்திரவாதியொருவரை அழைப்பித்து முழுதின மந்திரபல பூஜைகளை மேற்கொண்டிருந்தனர்.

இம் மந்திரபலத்தின் பூஜைகளில் உரிய பயன் கிடைக்காமையால் அப்பெண் நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு மயக்கமுற்றார். அதையடுத்தே கிராந்துரு கோட்டை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்தச்செல்லப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பயனளிக்காமையால் பெண் மரணமானார்.

ஏற்கனவே, இப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமென்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]