மத மூடநம்பிக்கையால் 16மாதக் குழந்தையை கொடூரமாக கொலைசெய்த தந்தை

ஏசு வருகிறார் என்று கூறியப்படியே மகனை, தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிறந்து 16 மாதமே ஆன ஆண் குழந்தையை பெற்ற தந்தையே கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனில்லாமவல் குழந்தை உயிரிழந்தது.

இந்த கொலை சம்பவத்தை கொலையாளி வீட்டிற்கு அருகில் வசித்தவர் பார்த்துள்ளார். கொலை நடப்பதை பார்த்த அவர் அதனை தடுப்பதற்கு அவர் வீட்டில் இருந்தே கொலையாளியை துப்பாக்கியால் காலில் சுட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை பக்கத்து வீட்டுகாரர் மீது எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்று கூறியது.

மேலும பக்கத்து வீட்டுகாரர் கூறியதாவது, ‘கொலை நடந்ததை நேரில் பார்த்தேன் அதனை தடுப்பதற்கே துப்பாக்கியால் காலில் சுட்டேன். ஏசு வருகிறார் என்று கத்தியபடியே அந்த பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்தான்’ என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]