முகப்பு News Local News மத்திய மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்

மத்திய மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்

மத்திய மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, கலஹா பிரதேச வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தோடு, தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யாவிடின் பாரிய பணிப்புறக்கணிப்பு ஒன்று நிச்சயம் முன்னெடுக்கப்படும் என்றும் அச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்ததையடுத்து, வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு மக்கள் சேதம் விளைவித்தமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com