மத்தல விமான நிலையத்தை செயற்படுத்த இந்தியாவின் உதவி தேவை

மத்தல விமான நிலையத்தை, கூட்டு முயற்சியாக, அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் விமான போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து கூட்டு முயற்சியாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த திட்டத்தில் பங்காளராக இணைந்து கொண்டால், மாத்திரமே இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக சாத்தியமாகும்.

இதுதொடர்பான உடன்பாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் இறுதிப்படுத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]