மது போதையில் வீதியில் கிடந்த எஜமானை பாதுகாப்பு அரணாக நின்ற நாய்- மனதை நெகிழ்ந்த வீடியோ

மது போதையில் வீதியில் கிடந்த தனது எஜமானை வேறு யாரும் எதுவும் செய்து விடக் கூடாது என்று பாதுகாப்பு அரணாக நாய் இருந்துள்ளது.

கொலம்பியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மது போதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் நிலைதடுமாறி நடு வீதியில் விழுந்துள்ளார்.

இதையடுத்து அவருடன் சென்ற நாய் ஒன்று அந்த இளைஞருக்கு பாதுகாப்பாக நின்றது. அவரைத் தொட முயன்றவர்களை குரைத்து பயமுறுத்தியது.

பின்பு குறித்த இடத்திற்கு வந்த காவலர் ஒருவர் மெதுவாக அந்த இளைஞனைக் கையைத் தொட்டு நாயின் பயத்தைப் போக்கினார்.

தொடர்ந்து அந்த இளைஞர் மீது நாய் கொண்ட பாசத்தை கருத்தில் கொண்டு இளைஞரை எச்சரித்து அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]