மது பாவனையால் வருடத்திற்கு 80 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு!

வருடத்திற்கு 80 ஆயிரம் இலங்கையர்கள் மதுபானம் மற்றும் புகையிலை பாவனையினால் உயிரிழப்பதாக, மது ஒழிப்பு ஜனாதிபதி பணிகுழு பிரதானி வைத்தியர் சமந்த குமார கிதலவ ஆரச்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் நோயினால் பாதிக்கப்படுவதாகவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தடுக்க, ‘தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம்’ எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தில்  மூன்றில் ஒரு பங்கினை மதுபானத்திற்காக செலவிடுவதாகவும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]