முகப்பு Life Style மது அருந்துபவர்களா நீங்கள்?? அப்போ உங்களுக்கு தான் இந்தபதிவு மிஸ் பண்ணாம படிங்க

மது அருந்துபவர்களா நீங்கள்?? அப்போ உங்களுக்கு தான் இந்தபதிவு மிஸ் பண்ணாம படிங்க

மது அருந்துவது இன்றைய தலைமுறையினர் ஒரு ஃபேஷனாகவே கருதுகின்றனர். இதில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போடும் அளவுக்கு மது பயன்பாடு அதிகரித்து விட்டது.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆல்கஹால் இல்லாமல் இருக்காது. அதனால் வரும் ஆபத்தைப்பற்றி சிந்திப்பதில்லை. ஆல்கஹால் பயன்பாட்டினால் மூளைக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும், மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறைவதாகவும் கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் மது அருந்துவதின் பயன்பாடு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு அவர்கள் பயன்படுத்தியது 13 முதல் 18 வயது கொண்டவர்கள்.

ஒரு குழுக்கள் ஆல்கஹால் எப்பொழுதுமே பயன்படுத்தாதவர்கள். மற்றொரு குழுவினர் ஆல்கஹால் எப்பொழுதும் பயன்படுத்தக்கூடியவர்கள்.

இந்த இரு குழுக்களையும் செயல்பாடுகள் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பரிசோதித்துள்ளனர். இரண்டு குழுக்களிலுமே நிறைய வேறுபாடுகள் காணப்பட்டுள்ளது.

மது அருந்தாதவர்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததாகவும், மது பயன்படுத்தக்கூடியவர்களின் செயல்பாடுகள் மந்தமாகவும், எல்லா விடயங்களிலுமே எரிச்சலடையக்கூடியவர்களாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆகவே இந்த ஆய்வின் முடிவில் மது அருந்துவோரின் மூளை சிந்திக்கும் ஆற்றல் குறைவதாகவும் கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com