மதுஷை கைது செய்ய அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை- நாமல் ராஜபக்ஷ சாடல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவர் என கூறப்படுகின்ற மாகந்துர மதுஷை கைது செய்ய அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாகந்துர மதுஷ் இதுவரை கைது செய்யப்படாமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதுஷுடன் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட கடவுச்சீட்டுக்கான உரிமையாளர் யார் என்பது தொடர்பாக அறியும் நடவடிக்கையை கூட அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால், ரஷ்யாவின் முன்னாள் இராஜதந்திரி உதயங்க வீரதுங்கவை கைது செய்ய பலமுறை டுபாய்க்கு சென்று நடவடிக்கை மேற்கொள்ள முயன்ற அரசு, மதுஷ் விடயத்தில் அமைதி காப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிணைமுறி மோசடி விவகாரத்தில் அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டதோ அதேபோன்றுதான் தற்போது மதுஸ் விடயத்தில் அரசாங்கம் செயற்படுவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]