காமெடியாகிப்போன கபாலி மாஸ் டயலாக்

மதுரவீரன்
சண்முக பாண்டியன் நடித்திருக்கும் ‘மதுரவீரன்’ படத்தில் அவருக்குப் பெண் பார்ப்பதற்காக ஒரு வீட்டுக்குச் செல்வார்கள். அது மொட்டை ராஜேந்திரனின் வீடு. மலேசியாவில் இருந்து வந்த மாப்பிள்ளை சண்முக பாண்டியனை வரவேற்பதற்காக ‘கபாலி’ ரஜினி கெட்டப்பில் இருப்பார்கள் வீட்டில் இருப்பவர்கள்.

மொட்டை ராஜேந்திரன் கபாலி ரஜினியை போல கோட் சூட் போட்டுக்கொண்டும், அவரது இரண்டாவது மகள் ‘யோகி’ தன்ஷிகாவை போல கிராப் ஹேர்ஸ்டைலிலும் இருப்பார்.

அதற்கு முன்பே ஒரு காட்சியில் மலேசியாவில் இருந்து வந்திருப்பதால் சண்முகபாண்டியனிடம், என்ன உடம்புல படமெல்லாம் வரையலையா எனக் கேட்பார் ஒருவர். அதற்கு சண்முக பாண்டியன் “மலேசியாவுக்கு போனா உடம்புபூராம் படம் வரையணுமா? நான் வேட்டிதான் கட்டுவேன்” என டயலாக் பேசுவார்.

மதுரவீரன்

‘கபாலி’ படத்தில் ரஜினி பேசும் மாஸ் டயலாக்கான “பறவைய பறக்கவிடு, வாழ்றதா சாகுறதானு அது முடிவு பண்ணட்டும்.. உன்னோட கருணை சாவைவிட மோசமானது” டயலாக்கை மொட்ட ராஜேந்திரன் பேசியிருக்கிறார்.


ஆனால், இந்தப் படத்தில் அந்தப் பறவை கோழியாக காட்டப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் ‘கபாலி’ யை புரட்டி எடுத்து விட்டார்கள். பாவம், டைரக்டருக்கு கபாலி மேல என்ன கோவமோ தெரியலை என ரசிகர்களே புலம்பும்படி ஆகிவிட்டது.