மதுபோதையில் சென்ற இரண்டு இளைஞர்கள் சிவனொளிபாதமலையில் கைது

சிவனொளிபாதமலை

சிவனொளிபாதைக்கு மது போதையில் சென்ற இளைஞர்களை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிஹிரிகமயிலிருந்து சிவனொளிபாமலைக்கு சென்ற இளைஞர்களே நேற்று  மாலை கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

வாடகைக்கு அமர்தப்பட்ட பஸ்ஸில் அங்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததுள்ளதுடன், கினிகத்தேன நகரில் பதையோரம் நடந்து சென்ற இரண்டு பாடசாலை மாணவிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

எனினும், பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து பொலிஸாரிடம் முறையிடவில்லை எனினும் மது போதையில் சிவனொளிபாதமலைக்கு சென்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணை கினிகத்தேன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]