மதுபோதையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

மதுபோதையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

அப்புத்தளைப் பகுதியில் உல்லாச நிலையத்திலிருந்த நால்வரே அப்புத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்படும் வேளையில் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தமையால் இவர்கள் கைதாகியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் பண்டாரவளையைச் சேர்ந்தவர்களாவார்.

பொலிஸாரின் விசாரணைகளுக்குப் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]