மதுபோதையால் ஏற்பட்ட விபரீதத்தில் நபர் ஒருவர் துடிக்கத்துடிக்க எரித்து கொலை- அதிர்ச்சி வீடியோ உள்ளே

மட்டக்களப்பு – வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் நபர் ஒருவர் எரித்துகொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், மதுபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை அடுத்தே சந்தேகநபர், 58 வயதான நபரை தாக்கி பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சந்தேகநபர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் பொது மக்கள் அவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மது போதையில் ஏற்பட்ட வாய்த்தக்கத்தில் போத்தலால் குத்தியதுடன் பெட்ரோலும் ஊற்றி கொலை செய்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடு வீதியில் எரித்துக் கொல்லப்பட்ட நபர்! சிறையில் இருந்து தப்பியவர் செய்த கொடூரம்?

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரத்தில் இன்று மாலை குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் நடு வீதியில் தீயில் கருகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட நபரை பட்டப்பகலில் ஒருவர் எரித்துக் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த நாகன் சாமியன் வயதுடைய (58) இரண்டு பிள்ளைகளின் தந்தையான புகையிரத கடவை தொழிலாளியே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று சரீரப்பிணையில் விடுதலையானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

“மது போதையில் இருந்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த நபரை சந்தேகநபர் தீயிட்டு எரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]