மதுபான தடை மீதான மனு விசாரணைக்கு

பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்வதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் இரண்டு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பிரபல நடிகை சமனலி பொன்சேகா உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்றத்தில் பத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்வது தொடர்பில் நீண்ட காலமாக நாட்டில் காணப்பட்ட தடை, நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அண்மையில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டிருந்தது.

எனினும், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்களைத் தொடர்ந்து இந்த தடை நீக்கம் மீள பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தடை நீக்கத்தை மீளப்பெற்றுக் கொண்டமையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்வதனை தடை செய்யும் அதிகாரம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு கிடையாது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். நிதியமைச்சர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, குறித்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் 18ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]