மதுபானம் தொடர்பான வர்த்தமானியை மீளப்பெற அனுமதி

மதுபானம்

மதுபானம் விற்பனை தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானியை வாபஸ் பெற அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை அதிகரித்தல் மற்றும் பெண்கள் மதுபான கொள்வனவில் ஈடுபடுவது, மதுபான விற்பனை, தயாரிப்பு நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றுக்கு இருந்த தடையை நீக்குதல் தொடர்பில் அண்மையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்திருந்தது.

இந்த திருத்தம் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]