மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை

வெள்ள நீர் வடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நிதியை வழங்குவதற்குரிய மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பான பணிப்புரையை வழங்கியுள்ளார்.

இதன்படி, வீதிகள், பாலங்கள் தொடர்பில் சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களுக்கான தொலைபேசி கட்டணமாக 500 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புள்ளாகும், களனி பிரசேதத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கான நிலையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனர்த்தங்களுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேலதிக நிதியையும் ஒதுக்க அரசாங்கம் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சேத மதிப்பீடு இன்றி காப்புறுதி தொகையை பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியடையும் வரை முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதுடன், அனர்த்தங்களுக்கு உள்ளான 20 மாவட்டங்களுக்காக நான்கு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]