மதவாச்சி – தலைமன்னார் ரயில்சேவை இடைநிறுத்தம்

மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான ரயில் போக்குவரத்து நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி காலை முதல் மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட உள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான பகுதியில் பாலம் ஒன்று அமைக்கப்படவதன் காணமாக ரயில் சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.

பயணிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக குறித்த காலகப்பகுதியில் மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையில் இணைந்த பஸ் சேவை செயற்படுத்தப்பட உள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]