அரசு பிலிம்ஸ் நிறுவனத்திற்கு படத்தை விற்றுவிட்டு அதன் பிறகு சிவபாலன் பிச்சர்ஸ்க்கும்  மதன்  விற்றதால் இன்று  படம்  ரிலீஸ்  ஆவதில் பெரும் சிக்கல் நிலவியது.

நீதிமன்றத்தை அணுகிய அரசு பிலிம்ஸ் நிறுவனம் படத்தை நாங்கள் தான்  வெளியிடுவோம். படத்திற்கு நாங்கள் பேசிய தொகை 13 கோடியில்   2 கோடியை முன்பணமாக கொடுத்து விட்டோம் . மீதி 11 கோடியை நீதிமன்றத்திலேயே உடனடியாக செலுத்துகிறோம் ஆனால் படத்தை நாங்கள்தான் வெளியிடுவோம் என்று அவர்கள் கூறியதை அடுத்து நீதிமன்றம் அந்த  படம் வெளிவருவதற்கு தடை விதித்து இருந்தது.

மதன்

இந்நிலையில் நேற்று அரசு பிலிம்ஸ் நிறுவனத்தினரை அழைத்த திரையுலக முக்கிய புள்ளிகள் சமரசம் பேசி மதன் செய்த தவறுக்கு பாதி பணத்தை இந்த படத்தில் கொடுத்து விடுவதாகவும் மீதி பணத்தை மதன் லாரன்ஸை வைத்தது அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தின் போது தருவதாகவும் உத்திரவாதம் கொடுத்ததை அடுத்து பாதி பணத்தை பெற்று கொண்டு அரசு பிலிம்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட நேற்று இரவு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து இன்று படம் வெளியாகிறது.

மதன்

மீதி பணத்தை மதன் வெளியில் வந்தவுடன் ராகவா லாரன்ஸ் அவருக்காக  ஒரு படம் நடித்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறார் . அந்த பட வெளியீட்டின் போது வழங்கப்படும் என்று  திரையுலக புள்ளிகள் தெரிவித்தனர்.

– அரசு பிலிம்ஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]