மண்டைதீவு சந்திப் பகுதியில் கடலில் மிதந்து வந்த மரப் பெட்டி

மண்டைதீவு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்திப் பகுதியில் கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பச்சை நிற மரத்தாலான பெட்டியொன்று மண்டைதீவு கடலில் மிதந்து வருவதை மீனவர்கள் சிலர் அவதானித்துள்ளனர்.

அதனையடுத்து குறித்த சந்தேகத்திற்கு இடமான பெட்டி தொடர்பாக மண்டைதீவு பொலிஸ் காவலரனுக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அப் பெட்டியை ஊர்காவற்றுறை பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

குறித்த பெட்டியினுள் குண்டுகள் சில காணப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரவித்துள்ளன. எனினும் குறித்த சந்தேகத்திற்கு இடமான பெட்டியை பொலிஸார் உடனடியாகவே அவ்விடத்தில் இருந்து அகற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதோடு அதில் இருந்த பொருட்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மண்டைதீவு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]