மணிரத்னம் பற்றி மனம் திறந்தார் நடிகர் அருண் விஜய்

மணிரத்னம் பற்றி மனம் திறந்தார் நடிகர் அருண் விஜய்

முதல் முறை மணிரத்னத்துடன் இணைவது பயம் கலந்த பொறுப்புணர்வை ஏற்படுத்தியது என நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

‘செக்கச் சிவந்த வானம்’திரைப்படம் குறித்து அவர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மணி சேர் படம் என்று சொல்லும் போதே பயம் கலந்த பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் என்னுடைய நடிப்பு திறமையை வெளிகாட்ட வேண்டும். ஏனெனில் இது மணி சேருடைய படம்.

மணி சேர் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கூறும் போதே நான் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட ஆரம்பித்தேன். மணி சேரை பொறுத்தவரை தன்னுடைய கதைக்கு என்ன தேவையோ அதை நாங்கள் சரியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். பின்னர் நாங்கள் ஜொலியாக இருக்கலாம்.

மணி சேர் எத்தனை படங்களை இயக்கி இருந்தாலும், படப்பிடிப்பின் போது அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டே தான் இருப்பார். அதனை பார்க்கும்போது எங்களுக்கு நாங்களும் இதனை சரியாக செய்ய வேண்டும் என்று தோன்றும்’ என்று அருண்விஜய் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எனவே தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் எதிர்வருகிற செப்டம்பர் 27-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் பற்றி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]