மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி – மாதவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `விக்ரம் வேதா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்ததாக பன்னீர் செல்வம் இயக்கத்தில் `கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர சமந்தாவுடன் `அநீதிக்கதைகள்’, த்ரிஷாவுடன் `96′, கவுதம் கார்த்திக் உடன் இணைந்து `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் `சீதக்காதி’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக மாதவன், ராம்சரண், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை மாதவன் மறுத்திருந்தார். இந்நிலையில், விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]