மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது வாகனங்கள் கைப்பற்றல்

 மணல் அகழ்வில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது வாகனங்கள் கரடியனாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் 5 உழவு இயந்திரங்கள் மற்றும் 4 டிப்பர் வண்டிகளும் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களாகக் கைதுசெய்யப்பட்ட இவ்வாகனங்களின் சாரதிகள் ஒன்பது பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து 2018 ஜனவரி 5 ஆந்திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவெளி மற்றும் புத்தம்புரி ஆகிய இடங்களில் வாவிக்குள் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் 8 வாகனங்களும் அனுமதிப்பத்திரத்தில் குறிக்கப்பட்ட இடத்தைவிட்டு வேறுஇடத்தில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியானாறு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து குறித்த பிரதேசத்தில் பதுங்கியிருந்து இச்சட்டவிரோத நடவடிக்கையினை முறியடித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]