மணல்காடு துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி – இரு பொலிஸார் கைது – தொடர்கிறது பதற்றம்

மணல்காடு பகுதியில் நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உதவி ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உதவி ஆய்வாளரான சிவராசா மற்றும் காவலரான மொகமட் முபாரக் ஆகிய இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்களாவர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும், சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

என்றாலும் இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலையில் பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் ரயர்கள் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியில் உள்ள துன்னாலைக்கும் கலிகைச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளன.

இதனால், பருத்தித்துறை கொடிகாமம் வீதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]