மணப்பெண்ணுடன் நடனமாடிய மணமகனுக்கு ஏற்பட்ட விபரீதம் – சோகத்தை ஆழ்த்திய சம்பவம்!!

ராஜஸ்தானில் திருமண விழாவில் மணப்பெண்ணுடன் நடனமாடிய போது, மணமகன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் பிரபல ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை திருமணம் நடந்து முடிந்து, இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடந்துக் கொண்டிருந்தது.

அப்போது, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்தில் இருந்து ”துஜே தேகா செய்ய ஜானா சனம்” என்ற பாடல் இசைக்கப்பட்டது.

இந்த பாடலுக்கு மணமக்களை நடனம் ஆடும் படி அவர்களின் நண்பர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால் இருவரும் அந்த பாடலுக்கு சந்தோஷமாக நடனமாடினர். ஆனால் அதுதான் அவர்களின் கடைசி நடனம் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை..

நடனம் ஆடிகொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மேடையிலே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே மணமகன் உயிரிழந்தார். இச்சம்பவம் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]