மட்டு தமிழ் பிரதேசங்களில் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

மாகாணசபைத் தேர்தல்

மட்டு தமிழ் பிரதேசங்களில் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுவதுடன் தமிழ் பிரதேசங்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் வீதம் அதிகமாக காணப்படுகின்றன.

குறிப்பாக காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் 80 சதவீhத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்

மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 2,92,840 வாக்குகளில் 4115 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தொத்த வாக்களிப்பில் 1.4 சதவீதமாகும்.

புத்தி ஜீவிகள், கல்விமான்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகபடியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதில் அளிக்கப்பட்ட 48191 வாக்குகளில் 622 வாக்குகளும்,

காத்தான்குடி நகரசபைக்கு அளிக்கப்பட்ட 24626 வாக்குகளில் 292 வாக்குகளும்,

ஏறாவூர் நகரசபைக்கு அளிக்கப்பட்ட 14971 வாக்குகளில் 88 வாக்குகளும்,

கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 13322 வாக்களில் 213 வாக்குகளும்,

கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 16020 வாக்களில் 130 வாக்குகளும்,

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 36547 வாக்களில் 329 வாக்குகளும்,

ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 37233 வாக்களில் 620 வாக்குகளும்,

மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 18250 வாக்களில் 297 வாக்குகளும்,

மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 16313 வாக்களில் 392 வாக்குகளும்,

தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 13527 வாக்களில் 201 வாக்குகளும்,

மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 32673 வாக்களில் 333 வாக்குகளும்,

போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட 21167 வாக்களில் 598 வாக்குகளும் நிராகரிக்கபட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]