மட்டக்களப்பு பிரேதேசத்தில் அமைத்து உள்ள பாழடைந்த கிணற்றில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பிரேதேசத்தில்மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பாழடைந்த கிணறொன்றில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீயில் அமைந்துள்ள பாழடைந்த கிணறிலிருந்து துர்நாற்றம் வெளிவருவதாக நேற்று (06) மாலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸால் குறித்த கிணற்றினுள் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

சுமார் 35 வயதுக்கு மேல் ​மதிப்பிடக்கூடிய குறித்த சடலம், இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸா தெரிவித்தனர்.

குறித்த இடத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் பரிசோதனைப் பிரிவு மற்றும் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் பரிசோதனை மற்றும் நீதிபதியின் உத்தரவுக்கமைய கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுமென, பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]