மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் ஒருவர் கொலை

மட்டக்களப்பு வாகரை – கட்டுமுறிவு குளத்தின் அருகில்; சனிக்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்ற குடும்ப தகராறினை தடுக்க வந்தவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண் வெட்டியால் தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவத்தில் கட்டுமுறிவு கிராமத்தைச் சேர்ந்த ராசக்குட்டி சவுந்தரம் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கட்டுமுறிவு கிராமத்தில் திருமணம் செய்துகொண்டதில் தந்தை – மகன் இடையே இடம்பெற்ற சண்டையின்போது மகன் மண்வெட்டியினால் தந்தையை தாக்குவதற்கு முயற்சித்த வேளை அதனைத் தடுக்க வந்த அயல் வீட்டுக்காரர் மண்வெட்டி வெட்டுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]