மட்டக்களப்பு வாகரை பகுதியில் யானையின் சடலம் மீட்பு

யானையின் சடலம்

மட்டக்களப்பு வாகரை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட தோணிதாட்டமடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேளை குறித்த குடியிருப்பு பகுதியில் உள் நுளைந்த காட்டு யானையொன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளது.

குறித்த யானைக்கு முதுகில் பாரிய காயம் ஒன்றும் காணப்படுகின்றது. மக்களின் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 80 மீற்றருக்கு அருகில் குறித்த யானை இறந்து காணப்பட்டது.

இரண்டு நாட்களாக குறித்த யானைக்கு அம்பாறையில் இருந்து வருகை தந்த வைத்திய குழுவினர் சிகிச்சையளித்தும் பயனளிக்காத நிலையில் செவ்வாய்கிழமை பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளதென குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

யானையின் சடலம் யானையின் சடலம்

குறித்த யானை இறந்த பின்னர் உரிய அதிகாரிகள் இதுவரைக்கும் வந்து குறித்த யானையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையெனவும், சுகாதர பிரச்சினை காரணமாக விரைவில் குறித்த யானையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 70 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள எல்லைக் கிராமமான தோணிதாட்டமடு பிரதேசத்திற்கு இதுவரை காலமும் யானை பாதுகாப்பு வேலி அமைத்து தரப்படவில்லை அதிகாரிகள் கண்டும் காணாது போல் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]