மட்டக்களப்பு வாகரை பகுதியில் 1100 ஹெக்டெயர் காணிசுவிகரிப்பு : யோகேஸ்வரன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்றொழில் நீரியல் வளஙகள் அபிவிருத்தி அமைச்சினால் 1100 ஹெக்டேயர் காணி வர்த்தக ரீதியான நீர்வாழ் உயிரினச் செயற்கைக்கு இனங்காணப்பட்ட காணியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது இந்த விடயம் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு கொண்டுவரப்படவில்லை எவருக்கும் தெரியாமல் வர்த்தமானி அறிவிப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமனற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

வாகரைப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று (13) வியாழக்கிழமை பிரதியமைச்சர் எம்எஸ்.எஸ்.அமீர்அலி மற்pறம் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத்தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் அரச திணைக்கள மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்னர்.

வாகரைப் பிரதேசத்தில் அனுமதி பெற்றவர்களுக்கு மேலதிகமாக வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கடல்அட்டை பிடிப்பதாகவும் இதனால் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல்அட்டை மற்றும் கடற்சிற்பி பிடிப்பது தொடர்பாக ஐந்து முகாமைத்துவக் குழு உள்ளது அவற்றின் அனுமதி பெறப்பட வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறன செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதனை அனுமதிக்க முடியாது. வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கடல்அட்டை மற்றும் மீன்பிடிக்க அனுமதி வழங்குவதில்லை என தீர்மானிப்பதாக தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்காமல் கடற்றொழில் நீரியல் வளஙகள் அபிவிருத்தி அமைச்சினால் 1100 ஹெக்டேயர் காணி சுவிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

இதில் வயல்கள், கனியவளங்கள், சேனைப்பயிர்ச் செய்கை காணி மேட்டு நிலங்கள் காணப்படுகின்றன இதனை அனுமதிக்க முடியர்து எமது பிரதேச வழங்கள் சுரண்டப்படுகின்ற என மேலும் கூறினார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் – கடற்றொழில் நீரியல் வளஙகள் அபிவிருத்தி அமைச்சினால் பனிச்சங்கேணி பகுதியை மையமாகக் கொண்டு காணி சுவிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வர்த்தமானி அறிவித்தல் 08.03.2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது மாவட்ட அபிவிருத்திக்குழுவிலோ அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவிலோ ஆராயப்படவில்லை யாருக்கும் தெரியாமல் இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வர்த்தமாகி அறிவிப்பபை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யது காணியை விடுவிப்பதற்காக நடவடிக்கையெடுக்க வேண்டும்.

நண்டு நகர திட்டத்திற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு 200 ஹெக்டெயர் காணி வழங்கப்பட்டு மேலும் 80 ஹெக்டேயர் அனுமதிக்கப்பட்டுள்ளது எனவே மேலதிக காணிகளை விடுவிக்க வேண்டும். வாக்ரைப் பிரதேசத்தில் காணி சுவிகரிப்பது எதிர்காலத்தில் பாரிய பாதிப்பபை ஏற்படுத்துவதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களை வழிவகுக்கும்.

செங்கலடி மற்றும் வாகரைப் பிரதேசங்களில் கிழக்கு மாகாண முதலமைச்ர் 1500 ஏக்கர் காணியை சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் சுவிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காமல் எந்தவித காணியையும் சுற்றுலாத் துறைக்கு வழங்க முடியாது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]