மட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோமீற்றர் வீதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோமீற்றர் வீதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோமீற்றர் வீதி எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பதிலளிக்க முடியாத அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை (09) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அவர் தொடரந்து தெரிவிக்கைiயில் – நல்லாட்சி அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டதில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பிரதேசத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படால் மாத்திரம் தான் அபிவிருத்தியை வெற்றிகொள்ள முடியும்.

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வேறு வேறு திசைகளில் பயணிக்கும் போது பாமர மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். தனக்காக உழகை;கு உறுப்பினர்களாக இருக்காமல் இலஞ்ச ஊழழலற்ற சபைகளை உருவாக்கும் உறுப்பினர்களாக செயற்பட வேண்டும்.

இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் இந்த நாட்டில் நடைபெற்ற கேட்ட தேர்தலாகவே நான் பார்க்கிறேன். நாங்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் இனிவரும் காலத்தில் இவ்வாறு தேர்தல் நடார்த்த இடமளிக்க மாட்டோம். தேர்தல் நடைபெற்று முடிந்தும் ஆட்சி அமைப்பது கடினமாக உள்ளது.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவிக்கையில் – கிழக்கு மாகாணசபையும் கல்வித் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட திருவிளையாடலின் பலனாக மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலங்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாங்கள் பல தடவை கூறியபோதும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. குறித்த வலயங்களில் பதலீடு இல்லாமல் ஆரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என முடிவு எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிக்காக அரச திணைக்கள அதிகதாரிகளுக்கு கூட்டத்துக்கு வருகைதாமைக்கான காரணம் கோரி கடிதங்கள் அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டது.