மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பண உதவிகள் வழங்கினாலும் திட்டங்களை நடைமுறைப்படுத்த எவரும் இல்லை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பண உதவிகள் வழங்கினாலும் திட்டங்களை நடைமுறைப்படுத்த எவரும் இல்லை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு

நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பண உதவிகள் வழங்கினாலும் திட்டங்களை நடைமுறைப்படுத்த எவரும் இல்லை. ஆனால் செய்யும் வேலையில் பிழை பிடிப்பவர்கள் மாத்திரமே உள்ளார்கள் என நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு

இலங்கையில் எந்தவொரு பாகத்திலும் உள்ள ஒரு ஒப்பந்தகாரராவது எனக்கு பணம் வழங்கியதாக கூறினால் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வதற்கும் தயாராக உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

நீர்ப்பாசன திணைக்களத்தின் 37வது பணிப்பாளர் நாயகமாக கடமையேற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த சீனித்தம்பி மோகனராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (02) மாலை செங்கலடி சீனிப்போடியார் ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

உறுகாமம் திட்ட முகாமைத்துவக் குழு முன்னாள் தலைவர் மு.மகேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொறியியலாளர்கள். தொழில்நுட்ப உதவியாளர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – மாவடியோடை அணை கட்டியதில் 50 மில்லியன் ரூபாய் திருடியுள்ளார். இவர் வந்தால் மட்டக்களப்புக்கு அழிவு காலம் இங்குள்ளவர்களை எல்லாம் மாற்றிவிடுவார் என உறுகாமமம் பிரிவு நீர்ப்பாசன பொறியிலாளர் காரியாலயத்திலிருந்து ஓகஸ்ட் மாத்திலிருந்து ஐந்து முறைப்பாடுகள் சிங்களத்தில் எழுதப்பட்டு ஜனாதிபதி மற்றும் நீர்ப்பாசன நீரியல் முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பட்டிருந்தது.

தமிழனுக்கு எதிரி சிங்களவர்கள் அல்ல மட்டக்களப்பானுக்கு எதிரி மட்டக்களப்பான் தான் இதை நான் எனது பதவியேற்பு தொடர்பான வியடயத்தில் நான் கற்றுக் கொண்டேன்.

எனக்கு சகல சிங்கள பொறியிலாளர்களும் சகல ஊழியர் சங்கங்களும் எனக்கு சார்பாக போராடிய சந்தர்ப்பத்தில் முறைப்பாடுகள் மட்டக்களப்பிலிருந்து வந்துகொண்டிருந்தன.

இந்த விழாவை தடை செய்வதற்காகவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனது பதவியேற்பின் போது மட்டக்களப்பிலிருந்து எவரும் வரவில்லை. மன்னார் முசலி பிரதேச விவசாயிகள் மாத்திரம் வந்திருந்தார்கள். உன்னிச்சை விவசாயிகள் கூட இவர் எங்க பணிப்பாளர் நாயகமாக வரப் போகிறார் என கூறியிருந்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு

ஜூலை மாதம் 30ஆந் திகதி நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் எனக்கு எதிரான முறைப்பாடுகளினால் நவம்பர் 30ஆந் திகதி அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவடியோடை அணைக்கட்டு தொடர்பாக திருடப்பட்டதாக கூறப்படும் 50 மில்லியன் தொடர்பாக இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அந்த பணம் எங்கே சென்றது என்பது இதுவரை அவர்களுக்குத் தெரியவில்லை.

மட்டக்களப்பு மண்ணிலிருந்து முதலாவது நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் உருவாகியுள்ளதை நினைத்து இந்த மண் பெருமைப்பட வேண்டும் எனக்கு பாராட்டுகள் தேவையில்லை.

நான் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு சென்றதிலிருந்து எனது மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்ட போதும் பல நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. ஒரு திட்டத்திற்கு 1200 மில்லியன் கொண்டுவந்தேன். அதை முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபரும் அவர்தான் கொண்டுவந்ததாக கூறிவிட்டுச் சென்றுவிட்டார். உலக வங்கியின் திட்டத்தில் 860 மில்லியன் திட்டத்திற்கு 1200 மில்லியன் திட்ட அறிக்கை செய்துவிட்டு இடமாற்றம் பெற்று கொழும்புக்குச் சென்றேன் இதுவரை நான் இருந்த காலத்தில் வழங்கிய ஒப்பந்தங்கள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளன. 400 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது மிகுதி 460 மில்லியன் திரும்பிப் போகப் போகின்றதா என்ற கவலை எனக்கு உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து வேலை எடுப்பதற்கு ஒப்பந்த காரர்கள் தயாராக இல்லை. பத்திரிகையில் விலைமனு கோரப்பட்ட போதிலும் எவரும் முன்வரவில்லை. இதனால் திணைக்களத்துடன் இணைந்து செய்யுமாறு உலக வங்கிக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]