மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி செவ்வாய்கிழமை (19) மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அரச, தனியார் நிறுவனங்களையும் பூரணமாக முடக்கி, வர்த்தக நிலையங்களைப் பூட்டி, போக்குவரத்துக்களை முடக்கி எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஹர்த்தால் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை, அரசாங்க அலுவலகங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை. வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் பாதுகாப்புகக்கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]