மட்டக்களப்பு மாவட்டத்தில் 6505.78 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை 22.10.2018 மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழவின் இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதியமைச்சர் அலிசாஹீர் மெளலானா நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் ரி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.புண்ணிய மூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் திணைக்கள தலைவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்

இக் கூட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் முடிவடைபாத அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 8505 திட்டங்களில் 4180 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6505.78 மில்லியன் ரூபா நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]