மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட காளாண் செய்கை வெற்றி

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட காளாண் செய்கை வெற்றி.

காளாண் செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட காளாண் செய்கை வெற்றியளித்துள்ளது. விவசாய அமைச்சின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு – மாவடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட காளாண் அறுவடை நிகழ்வு நேற்று (22) விவசாய திணைக்கள மாவட்ட பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

காளாண் செய்கை

விவசாயப் போதனாசிரியை ரமேசன் தெய்வமனோகரி இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காளாண் செய்கையை ஊக்குவிக்க விவசாய அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் காளாண் செய்கையாளுக்கு உள்ளீடுகள் மற்றும் காளாண் அடைகாப்பதற்கான கூடாரங்களை அமைப்பதற்கான நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன.

காளாண் செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு செயலகப்பிரிவில் ஆயித்தியமலை, நரிப்புல்தோட்டம் ,நாவற்காடு மற்றும் ஈச்சந்தீவு ஆகிய இடங்களிலும் கொக்கட்டிச்சோலையில் அரசடித்தீவு செங்கலடி செயலகப்பிரிவில் மாவடிவேம்பு மற்றும் மயிலம்பாவெளி ஆகிய இடங்களிலும் காளாண் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி விவசாய பணிப்பாளர் எம்ஸ்எம். சலீம் தெரிவித்தார்.

காளாண் செய்கை

காளாண் பயிர் ஒருமாதகாலம் அடைகாத்து வளர்த்து இரண்டு மாதங்களில் அறுவடை செய்வதன் மூலம் விவசாயிகள் போதுமான இலாபத்தை அடைகின்றனர்.

காளாண் உள்ளுர் மற்றும் வெளிநாடுகளிலும் உணவாகப்  பயன்படுத்தப்படுவதனால் சந்தைவாய்ப்பு அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காளாண் செய்கை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]