மட்டக்களப்பு மாநகர சபை திண்மக் கழிவுகள் முகாமைத்துவம் தொடர்பில் ஆராய்வு

மட்டக்களப்பு மாநகர சபை திண்மக் கழிவுகளை முகாமைத்துவ படுத்தும் நிலைய பகுதில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் துர்நாற்றத்துடன் புகை வெளிவருவதினால் வீதியில் செல்லமுடியாத நிலை உள்ளதகாவும் , அப்பகுதி பொதுமக்களுக்கு பெரும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இ இதன் காரணமாக 2 பேர் மயக்கம் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாகவும் இப்பிரதேச மக்கள் மக்கள் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு மாநகர சபை

குறித்த சம்பவத்தினால் மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சினை தொடர்பாக பொதுமக்களால் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி எஸ் எம் சாள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் ஹமட் அறிவிக்கப்பட்ட தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை

குறித்த பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்ததோடு மக்களுக்கான சுகாதாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]