‘மட்டக்களப்பு மாநகர சபை’யின் முதலாவது அமர்வு திங்களன்று ஆரம்பமானது

மட்டக்களப்பு மாநகர சபை

மட்டக்களப்பு மாநகர சபை’யின் முதலாவது அமர்வு திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மாநகர மேயர் தி.சரவணபவன் ஆரம்பமானபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வி.தவராஜாவின் முன்வைப்பினையடுத்து அன்னை பூபதிக்கு 3 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலை ஆரம்பமான அமர்வில் மாநகர கீதம், ஒரு நிமிட மௌன இறை வணக்கத்திதையடுத்து அமர்வு ஆரம்பமாக விருந்த நிலையில் உறுப்பினர் தவராஜா தமிழர்களுடைய பிரச்சினைத் தீர்வுக்காக உண்ணா நோம்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியில் 30ஆவது ஆண்டு நினைவுதினம் 19ஆம் திகதியாகும். அன்யை தினம் மாநகர சபை அமர்வில்லை. எனவே இன்றைய அமர்வில் 3 நிமிட இஞ்சலி செலுத்த சபை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அனைவரும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலியை அடுத்து சபை அமர்வுகள் நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற்றது.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு – அம்பாறைஅன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக அன்னை பூபதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

மட்டக்களப்பு மாநகர சபைமட்டக்களப்பு மாநகர சபைமட்டக்களப்பு மாநகர சபைமட்டக்களப்பு மாநகர சபைமட்டக்களப்பு மாநகர சபை

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.

அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.

அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூரப்படுகிறது.

இதே வேளை தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30 வருட நினைவு தினம் எதிர்வரும் 19 ம் திகதி மட்டு நாவலடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு தூபிக்கு அருகில் அடையான உண்ணாவிரதம் இருந்து அவரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் வருமாறு தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க. பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசத்தின் வேர்கள் அமைப்பு அன்னை பூபதியம்மா வெற்றிக் கேடயத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை கடந்த 6ஆம் திகதி முதல் நடாத்திவருகின்றது இதன் இறுதி சுற்றுப்போட்டி எதிர்வரும் 18 ம் திகதி மட்டக்களப்பு வெபர்மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 19 ம் திகதி மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவு தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டு அதன் பின்னர் பிற்பகல் நான்கு மணிக்கு ஈகைச்சடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

எனவே அன்றைய தினம் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள்,மாணவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]