மட்டக்களப்பு மாநகரசபை மேயராக தியாகராசா சரவணபவான் தெரிவு!!

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

38 உறுப்பினர்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான தியாகராசா சரவணபவான் மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதி மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கந்தசாமி சத்தியசீலன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு வியாழக்கிழமை (05) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.

மேயரைத் தெரிவுசெய்வதற்கான தியாகராசா சரவணபவான் மற்றும் சிவலிங்கம் சோமசுந்தரம் ஆகியோருக்கிடையில் பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது 25 வாக்கு பெற்று தியாகராசா சரவணபவான் மேயராக தெரிவு செய்யப்பட்டார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் 11 வாக்குகளைப் பெற்றார் இருவர் நடுநிலை வகித்தனர்.

பிரதி மேயர் தெரிவு செய்வதற்காக கந்தசாமி சத்தியசீலன், ஸ்ரீபன் ராஜன், தெய்வநாயகம் சிவலிங்கம் ஆகியோருக்கிடையில் போட்டி நிலவியது. இதன்போது நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கந்தசாமி சத்தியசீலன் 24 வாக்குகளையும், தெய்வநாயகம் சிவலிங்கம் 11 வாக்குகளையும், ஸ்ரீபன் ராஜன் 3 வாக்குகளையும் பெற்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]