முகப்பு News Local News மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டிக்கோயாவுக்கு இடமாற்றம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டிக்கோயாவுக்கு இடமாற்றம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடகாலமாக சட்ட வைத்திய அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த இலங்கையின் ஒரேயொரு பெண் சட்ட வைத்திய அதிகாரியான இனோக்கா ரத்னாயக்க நுவரெயா மாவட்டத்தின் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை 28.08.20018 இந்த இடமாற்றம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய சட்ட வைத்திய அதிகாரியாக பி.ஜி. ஜெயசூரிய கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இடமாற்றலாகிச் செல்லும் சட்ட வைத்திய அதிகாரிக்கான பிரியாவிடை வைபவமும் புதிதாக கடமைப் பொறுப்பேற்றுள்ள சட்ட வைத்திய அதிகாரிக்கான வரவேற்பு வைபவமும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 28.08.2018 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், பொலிஸ் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி பணிமனையின் அலுவலர்கள், தாதியர்கள் உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com