முகப்பு News Local News மட்டக்களப்பு – பதுளை வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணிகள் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு – பதுளை வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணிகள் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைப்பு

சவூதி அரேபிய அரசாங்கத்தின் கடன் நிதி உதவி மூலம் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு – பதுளை வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை 02.09.2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்கான சவூதிஅரேபிய அரசாங்கத்தின் கடன் நிதி உதவி மூலம் 9600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு – பதுளை, பிபிலை தொடக்கம் செங்கலடி வரையில் 87 கிலோ மீற்றர் தூரம் நவீன அபிவிருத்திக்குட்படுத்தப்பட உள்ளது.

இவ்வைபவத்தில் இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் தயா கமகே, பிரதியமைச்சர்களான பைஸல் காசிம், அனோமா கமகே மற்றும் ஸ்ரீயானி விஜயவிக்ரம உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வீதி மட்டக்களப்பையும் தென்னிலங்கையையும் இணைக்கும் பிரதான போக்கு வரத்து மார்க்கமாகும்.

பாணந்துறை, காலி, தங்காலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, பதுளை, பஸ்ஸறை, லுணுகலை, பிபிலை, பதியதலாவ, ஹற்றன், கண்டி, ஹஸலக, மஹியங்கனை, மஹாஓயா, தம்பிட்டிய ஆகிய பெரும் நகரங்களுக்கான போக்குவரத்து இவ்வீதியூடாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com