மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் கோர விபத்து- இருவர் பலி மூவர் படுகாயம்

மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலையில் கிரான் பிரதேசத்தில் திங்கட்கிழமை (25) நள்ளிரவு தனியார் சொகுசு பேரூந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் வேன் சாரதியான கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த பாலச்சந்திரன் வினோஜன் (வயது 24) மற்றும் கொக்கொட்டிச்சோலையைச் சேர்ந்த பிரகாஸ் கெல்வின் (வயது 11) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிற்சைக்கதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நெடுஞ்சாலையில்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேரூந்தும் கட்டுநாயக்கத விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு கொக்கொட்டிச்சோலை நோக்கி வந்த வேன் வண்டியும் நள்ளிரவு 11.20 மணியளவில் கிரான் இலங்கை வங்கி கிளைக்கு முன்பாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]