மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபரின் தாயார் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாயார் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று (25) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ள குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொட்ர்ந்து மேற்கொண்டு வந்த விசாரணையில், குறித்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக றில்வானின் உறவினர்களால் இவர் றில்வான் தான் என அடையாளம் காணப்படாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு புதிய காத்தான்குடி 4 ஆம் குறுக்கு ஒழுங்கையிலுள்ள றில்வானின் தாயாரின் வீட்டை குற்றப் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டு அவரிடம் தற்கொலை குண்டு தாரியின் புகைப்படத்தை காட்டிய போது அவருவடய மகன் என அடையாளம் காட்டியுள்ள நிலையில் அவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குண்டுதாரி கல்முனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெமட்டகொடையில் வசித்து வந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]