மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு சந்திவெளி வயற் பகுதியில் கைக்குண்டு இரண்டு இன்று வெள்ளிகிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி – திகிலிவட்டை துறை பகுதியை அண்மித்த பற்றைக்குள் கைக்குண்டு கிடப்பதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலொன்றினையடுத்து இக்குண்டுகள் மீட்க்கப்படடுள்ளன.

குறித்த குண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குணடுகளினைச் செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]