மட்டக்களப்பு குண்டுவடிப்பில் 28 பேர் பலி 76 பேர் படுகாயம்!

மட்டக்களப்பு நகரிலுள்ள சீயோன் தேவாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானார்கள் குண்டுவெடிப்பு மற்றும் எரிகாயங்களுக்குள்ளான மேலும் 76 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை வழமைபோல் ஆராதனைக்காக பெண்களட குழந்தைகள் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டோர் கூடியிருருந்து ஆராதனையில் ஈடுபட்டிருந்தவேளை காலை 9 மணியளவில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவம் காரணமாக தேவாலய கட்டடமும் கூரையும் முற்றாகச் சேதமடைந்துள்ள நிலையில் ஈடிபாடுகளுக்குள் அங்கு கூடியிருநு;தவர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் பொதுமக்களால் மீட்க்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாநாகரசபை தீயணைக்கும் படை மீட்பு பணிகளிலும் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற போதிலும் சம்பவத்திற்கான காரணம் மற்றும் தொடர்புடையவர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

போருக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமானது பல்வேறு தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மட்டக்களப்பு நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்ற அதேவேளை சோகமயமாகக் காணப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]