மட்டக்களப்பு இரு பொலிஸார் சுட்டுக்கொலை- கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்த சந்தேக நபர்

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிசார் இடையூறு வழங்கியதனால் பழிவாங்குவதற்காக இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது .

நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் இவருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாரியதாக கூறி நேற்று அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிப் பொலிஸ் விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில்

அவர் இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவர் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்

இவரது வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் CID இனரிடம் பொலிசார் பாரப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]