மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளீர் மன்ற மண்டபத்தில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு!

சர்வதேச மகளீர் தினத்தையொட்டி மட்டக்களப்பு இந்து மகளீர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளீர் தின நிகழ்வு வியாழக்கிழமை (08) மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளீர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

இந்து மகளீர் மன்றத் தலைவி திருமதி மனோகரி சீவரெட்ணம் தலைமைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஸ்ணமிஷன் தலைவர் சுவாமி பிரபு பிறேமானந்தா மகராஜ், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் வி.தவராசா, கிழக்குப் பல்கலைக் கழக வேந்தவர் வைத்திய கலாநிதி வே.விவேகாந்தராஜா, கிழக்குப் பல்கலைக் கழக இந்துகலாசார பீட தலைவர் திருமதி சாந்தி கேசவன், வைத்திய அதிகாரி திருமதி சாருமதி ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன் மன்றத்தின் நிதியுதவியில் இயங்கும் சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]