மட்டக்களப்பில் 148வது வீட்டுத் திட்டம் திறந்து வைப்பு

மட்டக்களப்பில் 148வது வீட்டுத் திட்டம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 148வது மாதிரிக் கிராமமான பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.உதயகுமார், தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு, நிர்மானம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன் வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் வீட்டுத் திட்டமானது பயனாளிகளின் மூன்று இலட்சம் ரூபாய் பங்களிப்புடனும், வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் ஐந்து இலட்சம் ரூபாய் மானியம் நிதியளிப்பிலும் கொண்டதாக அமையப் பெற்றுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு பயனாளிக்கும் பதின்மூன்று பேர்ச் காணி அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன், இம் மாதிரிக் கிராமத்திற்கு தேவையான சில அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் சிரேஸ்ட மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் மேலும் தெரிவித்தார்.

இதன்போது இருபது பயனாளிகளுக்கு அபிவிருத்தி செய்யப்பட்ட காணித் துண்டுகள் வழங்கல், ஒரு இலட்சம் ரூபாய் வீதம் விசிறி கடன்களுக்கான பணம் நூறு பேருக்கும், 321 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவி ஐந்து இலட்சம் ரூபாய் உதவி தொகை, 25 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடன் ஐந்து இலட்சம் ரூபாய் உதவி தொகை என்பன வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், பழமுதிர்ச்சோலை நகர் வீடமைப்புத் திட்ட இருபது பயனாளிகளுக்கு வீட்டின் ஆவணப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இருநூறு பேருக்கு மூக்கு கண்ணாடிகள், கலைஞர்கள் மூவருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்காக கலாசார அலுவல்கள் அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றது.

மட்டக்களப்பில் 148வது மட்டக்களப்பில் 148வது மட்டக்களப்பில் 148வது மட்டக்களப்பில் 148வது மட்டக்களப்பில் 148வது மட்டக்களப்பில் 148வது மட்டக்களப்பில் 148வது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]