மட்டக்களப்பில் 1000 இளைஞர் யுவதிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி

மட்டக்களப்பில் 1000 இளைஞர் யுவதிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 இளைஞர் யுவதிகளின் திறனை விருத்தி செய்து தொழிற்பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்குடன் அடுத்த ஆண்டு விஷேட தொழிற்பயிற்சித் திட்டமொன்றினை ஆரம்பிக்வுள்ளதாக தொடுவானம் செயற்திட்ட பயிற்சிகளுக்கான பயிப்பாளர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தெரிவித்தார்.

தொடுவானம் 2019 தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி வொய்ஸ் ஒப் மீடியா நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – தொடுவானம் 2019 நிகழ்ச்சிச் திட்டம் மூலம் 1000 இளைஞர்களுக்கான முற்றிலும் இலவசமான தொழிற்பயிற்சி வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஹோட்டல் முகாமைத்துவம், கட்டடக்கலை சார்ந்த தொழில், சுகாதார சேவைகள் உல்லாசத்துறை, வியாபார முகாமைத்துவம் மற்றும் ஆங்கில சிங்கள மொழி போன்ற துறைகளில் பயிற்சித் திட்டம் நடைபெற்றவுள்ளது. இதன் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தொழில்வாயப்புக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

18 முதல் 35 வயதுடைய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அடுத்த மாதத்திற்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளோம். தோழிற் பயிற்சி வழங்க எந்தவஜத கட்டணமும் அறிவிடப்போவதில்லை.

பயிற்சி முடிவில் தேசிய தொழிற் தகைமை ன்றாம் மட்ட சான்றிதழ் மற்றும் அவுஸ்டேலிய ஐஏஎம் நிறுவனத்தின் திறன் அபிவிருத்தி தர சன்றிதழ் வழங்கப்படவுள்ளது இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இதற்கு மேலதிகமாக ஊவா வெல்லஸ பல்கலைக் கழகத்துடன் இணைந்து பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன. இது மாத்திரமின்றி கூடியளவான செய்றைப் பயிற்சிகள் மூலமே இத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]