மட்டக்களப்பில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம்

மட்டக்களப்பில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து கல்முனைக்கு பயணித்த வேன், நள்ளிரவு 2 மணியளவில் வேககட்டுப்பாட்டடை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

இவ்விபத்தில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]