மட்டக்களப்பில் வெள்ளநீர் வடிந்தோடும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு : அனுர பிரியதர்ஷன யாப்பா

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வெள்ளநீர் வடிந்தோடும் வகையிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு முதல் கட்டமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 29.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு இடங்களில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியசன யாப்பா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வெள்ளநீர்

இதன் முதல் கட்டமாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் வெள்ளநீர் வடிந்தோடும் வகையிலான செயற்றிட்டங்கள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியசன யாப்பா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“”இயற்கை நீரோடும் வழிகள், கால்வாய்கள், நீரேந்துப் பகுதிகள் என்பனவற்றைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும். இப்பொழுது இந்த இயற்கை நீர் புகும் மற்றும் வெளிச் செல்லும் வழிகள் தடுக்கப்பட்டு அல்லது அந்தப் பிரதேசங்கள் சிலரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நாம் இயற்கை இடர்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. நாம் நாடுபூராகவும் இந்தப் பிரச்சினைகள் உள்ள பகுதிகளை வரைபு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

மட்டக்களப்பில் வெள்ளநீர்

அத்துடன், அந்தப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டு எதுவிதமான அத்துமீறல்களும் ஏற்படாவண்ணம் எமது அலுவலர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் அக்கறையாகவும் அவதானத்துடனும் இருக்கின்ற அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதால் வறட்சியையும் இன்ன பிற இயற்கை இடர்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது பற்றி கவலையுடனும் இருக்கின்றோம்.

காலத்துக்குக் காலம் ஏற்படும் வறட்சியினால் இங்கு மட்டுமல்ல வேறுபல இடங்களிலும் பலர் பாதிக்கப்பட்டு வருவது தெரிந்ததே”என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]