மட்டக்களப்பில் வருடாந்தம் 5650 மாணவர்கள் இடைவிலகல்

மட்டக்களப்பில் வருடாந்தம் 5650 மாணவர்கள் இடைவிலகல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்துடன் 46 சதவீதமான 5650 இளைஞர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்கள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலாத்துறையில் உயர் பதவிகளுக்கு 95 சதவீதமானவர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் முகமாக சுப்ரீம் செப் சமையல் கலைஞர்களுக்கிடையிலான போட்டியின் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை (01) மாலை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் மட்டக்களப்பில்

அவுஸ்திரேலியான் எயீட் நிறுவனம் இலங்கை திறன் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து மேற்படி சுற்றுவா விருந்தோம்பல் துறை ஊடாக இலங்கைக்கும் இலங்கை மக்களும் அடையக்கூடிய நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மட்டக்கப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவான், அவுஸ்ரேலிய தூதரக பிரதானி ஆர்.சிவசுதன், சுப்ரீம் செப் குழுமத் தலைவர் டேவிட் அப்லெட், குழும துணை தலைவர் கமலநாதன் ஜெயதாஸ், வூஸ்க் அமைப்பின் பிரதிநதி எஸ்.யோகேஸ்வரன், உட்பட பலர் கலநதுகொண்டனர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபையினால் 1000 நாள் வேலைத் திட்டம் 1000 வேலைவாய்ப்பு என்ற தொனிப் பொருளில் திட்டமொன்றினைத் தயாரித்துள்ளோம். 24 சுற்றுலா மையங்கள் விருத்தி செய்து 1000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு எமது மாவட்டத்திற்கு சுற்றுலா பணிகளாக வருபவர்கள் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கியிருந்து 1000 டொலர்களை செலவு செயது மக்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் எங்களது நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பில் மட்டக்களப்பில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்துடன் 46 சதவீதமான 5650 இளைஞர்கள் இடைவிலகுகிறார்கள். இவர்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லாதவிடத்து அனைவரும் சாதாரண தொழிலாளி வக்கத்தில் இணைவார்கள். இந்த நிலையைத் தவிர்ப்பதற்காக மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்களிப்புச் செய்யக்கூடிய துறைகளில் ஒன்றான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து எமது பிரதேச இளைஞர் யுவதிகளை இந்த துறைகளில் உள்வாங்கி அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக எமது மாவட்டத்தில் அமைய வேண்டும்.

நாட்டில் 2030ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்யும்போது சுற்றுலாத்துறை மற்றும் கட்டுமானத்துறையிலும் அதிக வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சுற்றுலாத்துறை அபிவிருத்தி மூலம் நாங்கள் எதிர்பார்க்கின்ற வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டுமானால் எமது இளைஞர் யுவதிகளை பயிற்றுவித்து திறமையான தொழில்சாபர் நிபணத்துவம் கொண்ட ஊழியர் படையணியை உருவாக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்கள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலாத்துறையில் உயர் பதவிகளுக்கு 95 சதவீதமானவர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளார்கள்.

எமது மாவட்டத்தின் கலாசாரம் பண்பாடுகள், சுற்றுலாத்துறை சார்ந்த போதமி தொழிவு இன்மை, பயிற்சி நிலையங்கள் இல்லாமை போன்ற காரணங்களினால் எமது இளைஞர்கள் சுற்றுலாத்துறையைத் தெரிவு செய்வதில்லை.

அரச துறையில் தொழில் புரிவது சிறந்தது தனியார்த்துறையில் தொழில் புரிவது ஆபத்தானது என்ற எமது இளைஞர்களின் மனநிலையை மாற்றும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டிலே 82 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புக்களை தனியார்துறையும் அரச துறை 14 சதவீதமான வேலைவாய்ப்புக்களையும் வழங்குகிறது. என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]