மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு, கித்துள் கிராம சேவைகர் பிரிவிலுள்ள கார்மலைப் பகுதியில் சனிக்கிழமை (5) மாலை காட்டு யானை வழிமறித்துத் தாக்கியதில் பண்ணையாளர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி – குமாரவேலியார்கிராமம் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான நாகண்டாப்போடி சங்கரப்பிள்ளை (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை தனது மாடுகளை பட்டிக்கு மேய்த்துச் சென்றவேளை திடீரென வழிமறித்த காட்டு யானைகளில் ஒன்று குறித்த பண்ணையாளரை விரட்டிச் சென்று தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் பண்ணையாளர் ஸ்தலத்திலேயே உயிரிந்துள்ளார்.

கரடினாறு பொலிஸார் ஆகியோர் ஸ்தலத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

யானை தாக்கி யானை தாக்கி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]